sullabhaath

Thursday, August 20, 2015

"சுக்குமி ளகுதி ப்பிலி" - பிறமொழிப் பாடகர்கள்

சுக்குமி ளகுதி ப்பிலி
என்னதான் சுவை என்றாலும் பொருந்தவில்லை என்றால் பயனில்லை.
கைலாஷ் கேர் நல்ல பாடகர்தான். அந்த அழுத்தமான குரலில் அவர் பாடும்பொழுது மண்ணின் மணம் வீசுகிறது.

நன்று. ஆனாலும் தீய்ந்து போன சோற்றில் மண் மணம்  வீசி என்ன பயன்?
என்னதான் பகீரத பிரயத்தனம் செய்தாலும் அவர் பாட்டில் குற்றியலுகரமும் குற்றியலிகரமும் படும் பாடு சுவையை எடுத்து விடுகிறது.
  • இந்த பொறப்பூ(பு) தான் மனுஷ வாழ்க்கைய..
  • தேசமே உயிர்த்து எழ(ழு)
ஏன்? தமிழ் பாடகர்களே இல்லையா? தொன்று தொட்டு பிறமொழிப் பாடகர்கள் ஆற்றிய சேவை(!!) போதவில்லையா?
உதித் நாராயண் - சுத்தம்
சாதனா சர்கம் - அய்யோ


சமயங்களில் யேசுதாஸ் கூட மறந்து போய் மலைநாட்டு வாசனையை கொண்டு வந்து விடுவார்..

  • ஏதோ நடக்குறது!
இவர்கள்தான் பிறமொழி பேசி தமிழில் பாடினார்கள் சரி. தமிழ்நாட்டிலேயே பிறந்து, தமிழ் பேசி வளர்ந்து 'ல' 'ள' வேறுபாடின்றி பாடுவோரை என்ன சொல்வது?
ரஹ்மான் மீது இது ஒன்றுதான் வருத்தம்.
  • கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புல்லியே!
யுவன் சங்கர்.. கேட்கவே வேண்டாம்.

#தமிழ்
#திரைப்படப்பாடல்கள்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home